சூரியசக்தி
மின்சாரம் மனிதனின் அடிப்படை தேவைகளுள் மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது. குண்டூசி முதல் கூட்ஸ் வண்டிவரை, மின்விசிறி முதல் ஏவு-கணை வரை எதுவாக இருந்தாலும், அதனை இயக்குவதற்கு மின்சாரம் தேவைப்-படுகிறது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரம் இல்லையெனில் மனிதனின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.
மின்சாரத்தின் தேவை மிக மிக அதிகம். ஆனால் மின் உற்பத்தி என்பது மிகவும் குறைவு. எனவே தடையில்லா மின்சாரத்தைப் பெறுவதற்கு சிறந்த வழி சூரிய ஒளி மின்சாரம்தான். இதுவரை நாம் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு சூரிய சக்தியைப் பெரும்பாலும் மறைமுக-மாகவே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்று ஏற்பட்டுள்ள மின் மற்றும் எரிபொருள் நெருக்கடியில் நிலைமை சூரிய சக்தியை நேரடியாகவே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
2. எந்தவகை மின்சாரம் கிடைக்கிறது ஏசி அல்ல டிசி மற்றும் எவளவு மின்சாரம்,அதன் பயன்பாடுகள் என்ன?
3. சூரிய வேளிச்சம் அதிகம் இருக்கும் போதும் இல்லாத போதும் சோலார் செல்லின் நிகழ்வுகள் என்ன?
சூரியசக்தி மூலம் கிடைக்கும் வெப்பத்தை சோலார் செல் எவ்வாறு மின்சக்தியாக மாற்றூகிறது ?
அசையும் அடுக்கு, நிலையான அடுக்கு என இருண்டுவகைகளாக சூரிய-மின் அடுக்குஅமைக்கப்படுகின்றன. அசையும் அடுக்கு என்பது நகரக்கூடிய வகையில் இயந்திர அமைப்புடன் இணைந்து எப்போதும் சூரிய ஒளிக்கு எதிராக இருக்கும் வகையில் அமைக்கப்-படுகிறது. இந்த இயந்திர அமைப்பு கையினால் இயங்கும் வகையிலோ அல்லது தானாக இயங்கும் வகையிலே அமைக்கலாம்.
நிலையான அடுக்கு
நிலையான அடுக்கு என்பது கிழக்கு மேற்காக அமைக்கப்பட்டு தெற்கு அல்லது வடக்குப் பக்கம் சிறிதளவு கீழ் இறங்கி சாய்வாக இருக்குமாறு அமைப்ப-தாகும். சூரியமின் அடுக்கு நிறுவப்பட வேண்டிய இடம் பூமத்திய ரேகைக்கு தென் திசையில் இருந்தால், அதன் வட-புறபக்கம் கீழ் இறங்கியும், சாய்வாக இருக்-குமாறும் அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் சோலார் ஒளி மின் செல்-களின் அடுக்கு குளிர்காலங்களில் அதிக-பட்ச சூரிய ஒளியைப் பெற்று அதிகமான மின் உற்பத்தியைத் தருகிறது.
தடையில்லா மின்சாரம்
சூரிய சக்தி அதிகமாகக் கிடைக்கும் பகுதிகளில் இந்தியாவும் ஒன்று. சூரிய-சக்தியை மின் உற்பத்தி சாதனங்கள் மூலம் மின்சக்தியாக மாற்றலாம். இதனால் தடை-யில்லா மின்சாரம் கிடைப்பதோடு, மின்-சார செலவும் குறைகிறது. சூரிய மின்-னாக்கி தகடு அடுக்கானது சூரிய ஒளியை, மின்சக்தியாக மாற்றி மின் சேமிப்பு கட்டுப்படுத்திக்குக் கொடுக்கிறது. பின்பு மின் சேமிப்பு கட்டுப்படுத்தியானது இன்வெர்ட்டர் மூலமாக தேவைப்படும் மின் சாதனங்களுக்கு மின்சாரத்தை வழங்-குகிறது. மேலும் தேவையற்ற மின்-சாரத்தை பேட்டரியில் சேமித்து வைக்-கிறது.
சூரியஒளி இல்லாதபோது அதாவது இரவு நேரங்களில் சாதனங்களுக்குத் தேவையான மின்சாரத்தை பேட்டரியில் இருந்து இன்வெர்ட்டர் மூலமாக வழங்-குகிறது. இதனால் கார்பன்டைஆக்ஸைடு போன்ற கழிவு வாயுக்கள் எதுவும் வெளியேறாது. காற்று மாசுபடுவதில்லை. நிலக்கரி, பெட்ரோல் போன்றவற்றின் தேவையும் கணிசமாகக் குறைகிறது.
சூரிய வேளிச்சம் அதிகம் இருக்கும் போதும் இல்லாத போதும் சோலார் செல்லின் நிகழ்வுகள் என்ன?
சோலார் செல்
பூமியில் இருந்து கிடைக்கும் ஜெர்-மேனியம், சிலிக்கான் ஆகிய மூலகங்கள் குறைக் கடத்திகள் வகையைச் சார்ந்தவை. தங்கள்மீது படும் சூரிய ஒளியை மின் சக்தியாக மாற்றும் வல்லமை பெற்றவை. சிலிக்கான் ஆக்ஸைடு பூசப்பட்ட இக்-குறைக் கடத்திகளின் வில்லைகள் சூரிய ஒளி மின்கலங்கள் (சோலார் செல்) எனப்-படும். இந்த வில்லைகளின் மீதோ, தொகுப்பு வில்லைகள் மீதோ (சோலார் பேனல்) சூரிய ஒளியைப் படச் செய்து, அதன் மூலம் மின் சக்தியை உற்பத்தி செய்யலாம்.
மின்சக்தி கட்டுப்படுத்தி
பகலில் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை மின்சேமக்-கலனில் (பேட்டரி) சேமிக்கப்படுகிறது. இரவில் தேவையான மின் சக்தியை மின் சேமக்கலனில் இருந்து அளிக்கவும், மின் சேமக்கலனை அதிக மின்னேற்றம் ஆகா-மல் பாதுகாக்கவும் மின்சக்தி கட்-டுப்-படுத்தி பயன்படுகிறது. மேலும் இரவில் மின்சேமக் கலனில் இருந்து சோலார் - ஒளிமின் செல் அடுக்கிற்கு மின்-சாரம் செல்லாமல் தடுப்பதற்கும் பயன்படுகிறது.
மின்சேமக்கலன்
ஆனோடு, கேத்தோடு ஆகிய செல்-களின் கூட்டமைப்பே மின் சேமக்கலன் ஆகும். குறைந்த அளவிலான மின் உற்-பத்-தியை எளிய முறையில் சேமிக்க தற்-கால மின் சேமக்கலன்கள் பெரிதும் உத-வு-கின்றன. ஆனோடு + கேத்தோடு _ ஆகிய இரண்டு எலக்ரோடு பொருத்தி எலக்ட்ராலைட் மூலமாக செய்யப்பட்ட அமைப்புதான் மின்சேமக்கலன்.
இதில் ஒரு மின் சுமையை இணைக்-கும்போது இரண்டு எலக்ராடுகளுக்கு இடையே எலக்ட்ரோலைட் வேதிவினை ஏற்பட்டு நேர் அயனி மற்றும் எதிர் அயனியாகப் பிரிகிறது. இதில் எதிர் அய-னியான எலக்ட்ரான் வெளிச்சுற்றில் உள்ள லோடு வழியாக பாய்கிறது. நேர்மின் அயனி எலக்ரோலைட் மூலம் பாய்ந்து மறு எலக்ரோடில் சேர்கிறது.
சூரிய ஒளி மின்சாரம்
சூரிய மின்னாக்கி தகடுகளில் உரு-வாகும் மின்சாரம் மின் சேமக்கலனோடு இணைந்து இருக்கும் போது வேதியியல் மாற்றம் எதிர்த்திசையில் நடைபெறுகிறது. இந்த இரண்டு வேதியியல் மாற்றத்தி-னையும் எலக்ட்ரோகெமிக்கல் ஆக்ஷன் என அழைப்பர்.
முதன்மை மின் கலன்களில் ஒரு முறை மட்டுமே மின்சாரத்தைப் பயன்-படுத்த முடியும். இதில் மின்சாரம் சேமிக்க இயலாது. துணை மின்கலன்களில் மின்-சாரத்-தைப் பயன்படுத்திய பிறகு மின்-சாரத்தை சேமிக்கலாம். இவ்வாறு பல-முறை மின்-சக்தியை சேமித்துப் பயன்-படுத்த-லாம். ஆத-லால் சோலார் மின்னாக்-கத்தில் துணை மின் கலன்களே பெரிதும் மின்சேமக்-கலன்களாக பயன்படுகின்றன. மேற்கண்ட
இந்த சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை ஏன் அந்தளவுக்கு வெற்றி பெறாமல் இருக்கு... சாதாரணமா சின்ன கால்குலேட்டர்ல இருப்பது கூட சரிவர இயங்குவதில்லையே... இந்த சூரிய சக்தி மூலம் மின்சாரம் முறைய எளிதாக வீட்டிலேயே நிறுவிக்கொள்ளலாம் என்ற நிலை வந்த பின்பும் ஏன் இதை யாரும் நடைமுறைப்படுத்த விரும்பவில்லை.. என்ன காரணம் ???
இந்த சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை ஏன் அந்தளவுக்கு வெற்றி பெறாமல் இருக்கு... சாதாரணமா சின்ன கால்குலேட்டர்ல இருப்பது கூட சரிவர இயங்குவதில்லையே... இந்த சூரிய சக்தி மூலம் மின்சாரம் முறைய எளிதாக வீட்டிலேயே நிறுவிக்கொள்ளலாம் என்ற நிலை வந்த பின்பும் ஏன் இதை யாரும் நடைமுறைப்படுத்த விரும்பவில்லை.. என்ன காரணம் ???
Friday, July 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்து